நடிகர் மாரிமுத்து இயக்குநர், நடிகர், சீரியல் நடிகர் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்தவர். இவர், நடிகராகவும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் இவரது நடிப்பில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானது. இந்தப் படத்தில் வில்லன் கோஷ்டியில் இருந்தாலும் ரஜினியுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் மாரிமுத்துவிற்கு இருந்தது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளாராம்.
இந்தப் படங்கள் கொடுத்த பிரபலத்தைவிட அதிகமான புகழை, சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரின்மூலம் பெற்றுவந்தார் மாரிமுத்து.
வில்லன் கேரக்டரையும் சிறப்பான நடிப்பால், ஆளுமையால் சிறப்பாக்க முடியும் ரசிகர்களை கொண்டாட வைக்க முடியும் என்பதற்கு மாரிமுத்துவும் முக்கியமான எடுத்துக்காட்டாக விளங்கினார்.
இவ்வாறு புகழின் உச்சிக்கு சென்ற நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது இறப்பு இன்றுவரை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், இவருடைய இறப்பு இயற்கை மரணம் கிடையாது என தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள அகோரி கலையரசன் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மாரிமுத்துவின் மரணம் இயற்கை மரணம் அல்ல. அதுபோல அது விதிப்படி நடந்ததுமில்லை.
இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் சீரியல் பார்க்கிறார்கள். அதில் அவர் முழுக்க முழுக்க பெண்களை டார்ச்சர் செய்யும் கேரக்டரில் நடித்து வந்தார்.
இதனால் இந்த கேரக்டரை பார்க்கும்போது இவனுக்கு ஒரு சாவு வர கூடாதா? இப்படி பொம்பளைகளை டார்ச்சர் பண்றானே என வாய் வழியாக திட்டிய அபசகுண வார்த்தைகளால் தான் அவர் இறந்து போனார் என்று ட்ரெண்டிங் சாமியார் கலையரசன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
அதுபோலவே நடிகர் விஜயகாந்த் மற்றும் பங்காரு அடிகளார் போன்றோரின் இறப்பு எனக்கு முன்பே தெரியும் என அவர் பேசி இருக்கிறார்.
தற்போது யாரைப் பார்த்தாலும் அவர்களின் மரணம் தான் என் கண்ணுக்குத் தெரிகிறது என அனைவரையும் பயமுறுத்தி வருகிறார் ட்ரெண்டிங் சாமியார் கலையரசன்.
Listen News!