தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மாரிமுத்து. சமீபகாலமாக சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்துவரும் இவருக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது.
இவ்வாறாக வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வரும் மாரிமுத்து நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்தமை பலருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இவரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் ஜோதிடர்கள் தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து தீயாக பரவி வருகின்றது.
அதாவது சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரிமுத்து அங்கிருந்த ஜோதிடர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவின் உடல்நிலை பற்றி சொன்னார்.
அதாவது மாரிமுத்துவிடம் இடுப்பிற்கு மேல் உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என கூற பதிலுக்கு மாரிமுத்து, இடுப்பிற்கு மேல் இதயம் ஓடிக்கொண்டே துடிக்கிறது எனக் கிண்டலாக கூறி இருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ஜோதிடர் சொன்னது பலித்து விட்டது ,உண்மையில் மாரிமுத்துவிற்கு இதயத்தில் பிரச்னை இருந்து இருக்கிறது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஜோதிடர் மகரிஷி கே ஆர் மந்த்ராச்சலம் அளித்துள்ள பேட்டியில் "மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணம் ஜோதிடர்கள் அல்ல, இறந்தவரை போய் தவறாக பேசுவது சரியானது கிடையாது. எதிர்நீச்சல் சீரியலில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஒருவேளை அது கூட அவரின் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம், இருப்பினும் அது அவருடைய தொழில்" என்றார்.
மேலும் "குறித்த விவாத நிகழ்ச்சி முடிந்ததும் மாரிமுத்து தங்களிடம் வந்து பேசியதாகவும், அந்நிகழ்ச்சியில் அப்படி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவும், அத்தோடு அந்த இடத்தில அப்பிரச்சினை முடிந்து விட்டதாகவும்" அவர் கூறியுள்ளார்.
Listen News!