சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த இவர் ஒரு திறமையான நடிகர்.
எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம்.
சீரியல் மட்டுமன்றி ஒரு சில படங்களில் நடித்தும் இறுக்கின்றார். அதாவது ‘பரியேறும் பெருமாள், கொம்பன், ஜீவா' ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாது 'கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார்.
இவரின் இறப்பைத் தொடர்ந்து இவர் குறித்த நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தான் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் நிறைவேறாத தனது காதல் ஆசை குறித்து மாரிமுத்து மனம் திறந்து பேசியுள்ளார். அதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். நான் சிவகாசியில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கவிதையின் மூலமாக பெண் ஒருவரின் நட்பு கிடைத்தது.
கடிதத்திலேயே பரிமாறப்பட்ட எங்களுடைய நட்பு பின்னாளில் காதலாக மாறியது. ஒருநாள் அந்த பெண்ணை நேரில் பார்க்க குற்றாலத்துக்கு நான் புறப்பட்டுச் சென்றேன். ஆனால் அப்பெண்ணுடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. என்னவென்று பக்கத்து வீட்டில் விசாரித்தேன். அவங்க என்னிடம் ஒரு பெரிய சம்பவம் குறித்து சொன்னாங்க. குறித்த சம்பவத்தின் காரணமாக அப்பெண் குடும்பத்தோடு எங்கேயே போய்ட்டாங்க. இப்போ வரைக்கும் அந்தப்பெண் எங்கே இருக்காங்க என்று எனக்கு தெரியாது, அந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
"ஒரு பெண்ணை ஒருவன் பார்க்காமலே காதலிச்சான், சொல்லப்போனால் காதல்கோட்டை படம் மாதிரி இருக்கும், அந்த பெண்ணை பார்க்க போன இடத்தில் அவரை காணவில்லை இதையெல்லாம் வச்சி தான் கண்ணும் கண்ணும் படத்தின் கதை அமைந்தது" எனவும் மாரிமுத்து அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!