• Sep 20 2024

சந்திரமுகி 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மார்க் ஆண்டனி- விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதோடு வினாத்குமார் இப்படத்ததை தயாரிக்கின்றார். இப்படத்தில் விஷாலுடன்  எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்.

அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடிக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி திருநாள் அன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதேபோல பிரபல மூத்த இயக்குநர் பி.வாசு அவர்களுடைய இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வைகைப்புயல் வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் தான் சந்திரமுகி பாகம் 2.


கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தினுடைய தொடர்ச்சியாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரு  திரைப்படமும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி திருநாள் அன்று வெளியாகி நேருக்கு நேர் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement