பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதோடு வினோத்குமார் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில், டைம் ட்ராவல் ஆக்ஷன்மற்றும் காமெடி கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படமானது வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்துள்ளது. அந்தவகையில் இதுவரை ரூ 85 கோடி வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் 100கோடியை நெருங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!