• Sep 20 2024

18 வயதில் கல்யாணம் திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாமே முடிந்து விட்டது- ஆனந்த ராகம் சீரியல் நடிகையின் வாழ்க்கையில் இத்தனை சோகமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம், ஷு தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரிஹானா.இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான புகார் கூறிய போது, விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில்  ரிஹானா பிரபல சேனலுக்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது குறித்து பேட்டியொன்று அளித்துள்ளார். அதில், எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு சீரியலில் நடிக்க விருப்பம் இல்லை. என் தங்கை ஆடிசன்ஸ் டெஸ்டிற்கு போகும் போது, நானும் கூட போயி இருந்தேன் அப்போது ஒரு இயக்குநர் நீங்க நடிக்கிறீங்களா என்று கேட்டார்.


சிம்ரன் நடித்த அக்னி பறவை என்ற சீரியலில் நான் டீச்சராக நடிச்சேன். அதன் பிறகு சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அந்த சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு வாய்ப்பு வராததால். நான் ஏற்கனவே நடத்தி வந்த மெஜ்சை தொடர்ந்து நடத்தி வந்தேன்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல சம்பாதித்துத்துதான் ஆக வேண்டிய நிலை வந்ததால், நடிப்பது என்று முடிவு எடுத்து நடிக்கத் தொடங்கினேன். இதனால், எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இப்போது எனது இரண்டு குழந்தைகளை தான் வளர்த்து வருகிறேன். 18 வயதில் எனக்கு கல்யாணம் ஆச்சு,19 வயதில் குழந்தை பிறந்தது, அடுத்த 24 வயதில் இன்னொரு குழந்தை என இப்படி திரும்பி பார்ப்பதற்குள் எல்லாமே அவ்வளவு சீக்கிரமா நடந்து முடிந்து விட்டது.


என் கணவர் ரொம்ப நல்லவர் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, திடீர்னு என்ன ஆச்சுனே தெரியல, என்னிடம் மோசமாக பேச தொடங்கினார். ஒரு நாள் நாலு பேர்கூட போய் உன் குழந்தைகளை பார்த்துக்கோ என்று சொல்லிட்டு போய்விட்டார். என் குழந்தைகளுக்காக நான் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த பணத்தில் ஆடம்பரமாக வாழமுடியவில்லை என்றாலும், என் குழந்தைகளுக்கு தேவையானதை என்னால் செய்ய முடிகிறது என்று நடிகை ரிஹானா பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement