• Sep 20 2024

ஜான்வி கபூருக்கு திருமணம்- யாரும் எதிர்பாராத வகையில் கண்டிஷன் போடும் போனி கபூர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவரே நடிகை ஸ்ரீதேவி. “அம்மாவிற்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை மகள்” என்பதை போல் இவரின் மகளான ஜான்வி கபூரும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக ஜொலித்து வருகின்றார்.

தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற ஜான்வி கபூர் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக மாறி இருந்த “கோலமாவு கோகிலா” என்ற படத்தின் ரீமேக்கான ‘குட் லக் ஜெரி’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் மிக விரைவில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு அம்மாவைப் போன்று படங்களில் ரசனை கொண்டு ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற ஜான்வி கபூர் போட்டோ ஷூட் நடத்துவதிலும், வீடியோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் கொண்டவர்.

ஜான்வி கபூருக்கு தற்போது 25 வயதாகிறது. அவருக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என அப்பா போனி கபூர் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

'மாப்பிள்ளை என்னை விட உயரமாக இருக்க வேண்டும்' என்பது தான் அது. போனி கபூர் 6 ஆடி 1 இன்ச் உயரம் இருப்பவர், அவரை விட உயரமாக ஒருவர் தான் மகளுக்கு கணவராக வர வேண்டும் என கூறிவிட்டாராம்.

இந்த விஷயத்தை ஜான்வி கபூர் தான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement