இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார்.
2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013-ஆம் ஆண்டில் ‘கீதாஞ்சலி’ எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாகத் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ என்னும் திரைப்படமே. இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ‘பைலட்ஸ், அச்சனே எனக்கு இஷ்டம், இது என்ன மாயம், ரஜினி முருகன், தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற பல படங்களும் வெளியாகி இருக்கின்றன. இவற்றை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு படங்களிலேயே அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றார்.
எனினும் அது மட்டுமின்றி அவர் ஹீரோயின் centric படங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார் எனவும், விரைவில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் விரைவில் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்-யார் மாப்பிள்ளை தெரியுமா..?
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் செய்தி… அடுத்தடுத்து மூன்று படம்?
- ஷங்கரின் மகள் அதிதியை தாக்கி பேசிய நடிகை ஆத்மிகா- பொங்கி எழும் ரசிகர்கள்..வைரலாகும் ட்வீட்..!
- வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்-உலகம் முழுவதும் இத்தனை கோடியா..?
- ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ் கூறிய விசயம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!