தமிழில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ தற்போது ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கி வருகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என பலரும் நடிக்கிறார்கள்.
மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை மட்டுமின்றி சென்னையிலும் ஒரு மாதம் நடந்தது. ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது.
இவ்வாறுஇருக்கையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்திருக்கிறார் என்பது தான். ஷாருக் கானுக்கும் அவருக்கு ஒரு பெரிய சண்டை காட்சி படத்தில் இருக்கிறதாம்.
புஷ்பா படத்தின் மூலமாக ஹிந்தியிலும் பிரபலம் ஆகி இருக்கும் அல்லு அர்ஜுன் தற்போது நேரடியாக ஹிந்தி படத்தில் நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!