நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அத்தோடு படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படம் பற்றி சிறப்பான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.
இப் படத்தை அடுத்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார்.
இதனால் ரசிகர்களின் 13 ஆண்டு கால ஏக்கம் நிறைவடைந்துள்ளது. தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இதில்,ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாத், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
பல வருடமாக திரையில் தென்படாமல் இருந்த மைக் மோகன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் கேரக்டரில் நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நட்ந்த நிலையில், அவரிடம் கால்ஷீட் கிடைக்காததால், அவருக்கு பதிலாக மைக் மோகன் நடிக்க இருக்கிறார்.
அப்பா,மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில், விஜய்யின் இளவயது நண்பர்களாக பிரபுதேவா மற்றும் பிரசாந்த் நடிக்க உள்ளனர்.இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் தளபதி 68 படத்தில் விஜய், பிரபு தேவா மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரும் இடம்பெறும் பாடல் De-Aging தொழில்நுட்பத்தை கொண்டு எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் இளம் வயது விஜய், தனது இரு நண்பர்களுடன் இணைந்து பாடும் பாடலாக இருக்கலாம் நம்பப்படுகிறது. படத்தில் பாடல் முடிவடைந்த நிலையில், தற்போது தளபதி 68 படக்குழு தென்னாபிரிக்கா நாட்டுக்கு சென்றுள்ளது என்றும், அங்கு ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!