• Sep 21 2024

தெலுங்கில் மாஸ் காட்டும் விக்ரம் திரைப்படம் -எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் திகதி வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துள்ளது.

உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் வரும் நாட்களில் ரூ. 300 கோடியை படத்தின் வசூல் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விக்ரம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் படைத்துள்ள வசூல் சாதனை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் தற்போது வரை தெலுங்கில் மட்டும் ரூ. 25+ கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம். மேலும் இதுவரை அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களில் விக்ரம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement