மாஸ்டர் பரத் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது தனது படங்களின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். உத்தம புத்திரன் திரைப்படத்தில் புலி கேரெக்ட்டரில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு மிகவும் வசீகரமாக இருந்தது.
அவர் கூறுகையில் 'உத்தம புத்திரன் தெலுங்கில் 2008ல் எடுத்தார்கள் அதில் நான் போட்ட காஸ்டியூமை தமிழில் 2010ல் இயக்கிய உத்தம புத்திரன் படத்திற்கு போட தந்தார்கள். 2 வருடம் தானே என்று நினைத்து விட்டார்கள் ஆனால் நான் 2 வருடத்தில் இவ்வளவு பருமனாகி விடுவேன் என்று அவர்கள் நினைக்கவில்லை.
அந்த காஸ்டியூம் எனக்கு பத்தவில்லை, பின்பு வேறு காஸ்டியூம் தைத்து தந்தார்கள். மேலும் அவர் போக்கிரி படத்தில் வடிவேல் சார் ஒரு சின்ன இடத்தில் கிட்டாருடன் சங்கி மங்கி என்று பாடிவிட்டு அதோட அவர் பேட் இன்ஸ்பெக்ட்டர் அண்ட் தி ரௌடி என்று ஒரு வார்த்தை சொல்லி இருப்பார் அது அவர் இயல்பாவே சொன்னது தான்.
அவர் காமெடியாக அதை பேசவில்லை உண்மையாகவே பேசியது ஆனால் காமெடியாக அமைந்து விட்டது என்று கூறியிருந்தார். வடிவேல் சாரின் ஸ்பெஷல் இதுதான் அவரின் body language, இயல்பான காமெடி அவர்கிட்ட இருக்கு. அது அவரின் ரத்தத்திலேயே ஊறி இருக்கு. அவர் நடிக்கிறார் என்பதே தெரியாது என்று வடிவேலை பற்றி பேசினார்.
அதையடுத்து பிரபு தேவா சாரிடமும் அந்த இயல்பு இருக்கிறது. ஒரு படத்தில் காமெடி செம்மையாக இருக்கிறது என்றால் அந்த படத்தின் இயக்குநரிற்கும் அந்த காமெடி இயல்பாகவே இருக்க வேண்டும். வடிவேல் சார் ஸ்கிரிப்டை பேஸ் பண்ணி நடிச்சுக்கிட்டே இருப்பார்.
ஒரு படத்திற்கு நான் டப்பிங் கொடுக்க போயிருந்தேன் அப்போது எனக்கு வயது 3. அங்கு கமல் சார் வந்திருந்தார், எல்லாரும் எழுந்து நின்றார்கள் நான் மட்டும் இருந்து விளையாடிக்கொண்டு இருந்தேன் அப்போது என்னை யாரோ எழுந்து நிற்க சொன்னார்கள் அதற்கு கமல் சார் வேண்டாம் அப்படியே விடுங்கள் என்று கூறினார்.
இதுவரைக்கும் நான் சிறுவனாக இருந்ததிலிருந்து இப்ப வரை, நான் பெரிய நடிகர் என்னிடம் மரியாதையாக இருக்க வேண்டும் என்று கூறும் யாரையுமே நான் பார்க்கவில்லை என்று சுவாரஸ்யமாக பேசி இருந்தார்.
Listen News!