• Sep 20 2024

மௌனராகம் சீரியல் நடிகர் தருணுக்கு என்கேஜ்ட்மென்ட் முடிந்தது- அடடே இந்த நடிகையை தான் காதலித்து வந்தாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம். பிரமாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சீரியலானது தந்தையின் பாசச்தையும் இசையையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இந்த மௌனராகம் சீரியலில் தருண் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ராகுல் ராம். இவர் இது தவிர மலையாளத்திலும் ஒரு சீரியலிலும் நடித்து வருகின்றார்.


அந்த வகையில் மலையாள சீரியலில் தன்னுடன் நடித்து வரும் அஸ்வதியை காதலிப்பதாக சில நாட்களுக்கு முதல் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் இன்றைய தினம் என்கேஜ்ட்மென்ட் நடந்துள்ளது.


இந்த விழாவுக்கு மௌனராகம் சீரியலில் வருணாக நடிக்கும் சல்மான்கான் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement