தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகின்றது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிகழ்ந்து வருகின்றது. ஷங்கர் மகள் அதிதி ஹீரோயினாக இதில் நடித்து இருக்கிறார்.
அத்தோடு மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் மாவீரன் படத்தை இயக்குகிறார்.
மாவீரன் படத்தின் பட்ஜெட் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அத்தோடு 18 கோடி ரூபாயில் தான் மாவீரன் படத்தை இயக்குநர் எடுத்து இருக்கிறார்.
ஆனால் தற்போது படத்தின் டிஜிட்டல், டிவி உரிமை உள்ளிட்ட ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் மூலமாகவே 83 கோடி ருபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்து இருக்கிறதாம்.இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் இந்த வியாபாரம் 100 கோடியை தொட்டுவிடும் என்று கூறுகின்றனர். அந்த வகையில் பிரின்ஸ் திரைப்படத்தின் மோசமான தோல்வி மாவீரன் படத்திற்கு ஒரு தடையாக இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால் சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவருடைய மார்க்கெட் மட்டும் குறையவில்லை என்பதே உண்மை.
அது மட்டுமல்லாமல் அவருடைய படம் என்றால் பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பார்கள். மேலும் இப்படி ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் அவருக்கு இருப்பதால் அவருடைய மார்க்கெட்டும் நிலையாக உள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் என்ற பெயருக்காகவே தற்போது படத்தின் வியாபாரமும் பிச்சு கொண்டு போகிறதாம். அந்த வகையில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் அவருடைய இடத்தை அசைக்க முடியாது என்பது இதிலிருந்தே தெரிகிறது என்பதே உண்மை.
Listen News!