இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அத்தோடு அதிதி விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு வீடியோ வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்தது.இதையடுத்து தொடங்கிய படப்பிடிப்பு 3 நாட்கள் நடந்த நிலையில் அதன் பிறகு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் கதாநாயகி ப்ரியாவை சல்வாரில் பார்த்திருக்கின்றீர்களா?- வேற லெவல் கிளிக்ஸ்
- பெரிய ரம்பா தொட போவியா- பிரபல காமெடியன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மறைந்த நடிகர் விவேக்
- பங்களா வீடு, சொகுசு கார்.. மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
- கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுற்கு வாங்கிக் கொடுத்த காரைப் பார்த்திருக்கின்றீர்களா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!