டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபிகா.
சமீபத்தில் இவர் அதே வெப் தொடரில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் தீபிகா, ராஜா வெற்றி பிரபு திருமணத்திற்கு பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்து உரையாடினார்.
அப்போது அவர், நாங்கள் வந்திருக்கும் இடத்தில் நேற்று அஜித் குமார வந்திருந்தார். ஆனால் எங்களால் அவரை பார்க்க முடியவில்லை. எனக்கு அஜித் குமார் என்றால் பிடிக்கும்.
அத்தோடு அவர் இங்கு வருவது தெரிந்திருந்தால் நாங்கள் எங்கள் திருமணத்தை ஒரு நாள் முன்னாடி வைத்திருக்கலாம்.அத்தோடு அஜித் குமாருடன் புகைப்படம் எடுக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தீபிகா கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!