பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றவர் தான் தினேஷ். அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் மூன்றாவது ரன்னர் அப் கிடைத்தது.
இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தினேஷை, அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் சேர்ந்து வெற்றிக் கொண்டாட்டம் செய்துள்ளார்கள்.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியோடு திரும்பிய தினேஷ், தனது முதலாவது பேட்டியை வழங்கியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும் போது பிரதீப் பவரான போட்டியாளராய் இருந்தாரு. உள்ள இருந்த மற்ற கன்டென்ஸ்டுக்கு அவரோட கேம் எந்தளவுக்கு புரிந்தது என்பது தெரியாது.
அதே நேரத்தில் மாயா வந்து வீக்கான, நிறைய மைனஸ்சோடு பிக் பாஸ்ல இருந்தாங்க. ஆனா அவங்க கைண்ட் ஆஃப் பிளேயர். வேற மாதிரி மைண்ட் கேம் ஆடக்கூடிய பிளேயர்.
அதேபோல விசித்ரா மேம் நல்ல ஸ்டார்ங்கா கேம் ஆடக்கூடிய பிளேயர். நான் உள்ள போனப்போ பிரதீப், மாயாவும் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்ட்ல வந்துட்டு இருந்தாங்க.
பிக் பாஸ் வீட்டுல உள்ள எல்லாருக்குமே சின்ன கன்பியூசன் என்னவென்றால், ரெண்டு பேரையும் நாமினேஷன் பண்ணாம ஒரு விஷயம் பண்ணனும் அப்படி என்று ஒரு விஷயம் போயிட்டு இருந்துச்சு.
அப்ப நான் விசித்ரா மேம் கிட்ட சொன்னேன், நீங்க பிரதீப், மாயாவ நாமினேஷன் பண்ணாதீங்க... அது வேஸ்ட் அப்படின்னு...
மேலும் பிக் பாஸ் வீட்டுல இறுதியாக இரண்டு வாரம், மாயா இருந்த பக்கமே நீங்க போகல.. அது ஏன்? அவங்களுக்கு கமல் சப்போர்ட் இருக்கு என்று என்பதாலா? என தினேஷிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
அப்படி எல்லாம் இல்ல, அப்படின்னு பார்த்தா நான் உள்ள போன நாள் முதல் மாயாவ நாமினேஷன் பண்ணல. ஏன்னா.. அவங்கள மக்களுக்கு பிடிக்குது பிடிக்கல அது வேற விஷயம்.. அவங்க கேம் பிளே என்ன என்றும் புரியல. ஆனா அவங்க ஒரு நல்ல கேம் பிளேயர்.
அதுபோலத்தான் பிரதீப், விசித்ரா மேம், மாயா, பூர்ணிமா எல்லாரும் நல்ல கேம் பிளேயர்ஸ். இந்த மாதிரி நல்ல கேம் விளையாடுறவங்க கூட இருந்து நான் விளையாடினால் தான் எனக்கு நல்ல ஒரு ஹாப்பினிங்கா இருக்கும் என தோணுச்சு என்றார்.
இதேவேளை, நல்ல கேம் பிளேயர் லிஸ்டில் அர்ச்சனா பெயரை ஒரு முறை எனினும் தினேஷ் சொல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!