விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், LCU கான்செப்ட்டில் தான் இருக்கும் என்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதனிடையே விக்ரம் படத்தின் ப்ரீக்வெல்லாக லியோ உருவாகி வருவதாக தெரிகிறது. லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனும் லியோவில் இணைந்துள்ளார். லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் மாயா கிருஷ்ணனும் கெளதம் மேனனும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்திருப்பார் மாயா கிருஷ்ணன். ரெட் லைட் ஏரியாவின் கால் கேர்ளான மாயா கிருஷ்ணா, கமலின் கஸ்டமராக நடித்திருப்பார்.
முக்கியமாக இந்த காட்சியில் மாயா கிருஷ்ணனின் வாய்ஸ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்னொரு காட்சியில் ஃபஹத் பாசிலுடன் அதே கால் கேர்ளாக நடித்திருப்பார்.விக்ரம் படத்தில் நடித்தது மொத்தமே இரண்டு காட்சிகள் என்றாலும், மாயா கிருஷ்ணனின் சவுண்ட் தான் அவரை ரசிகர்களின் மனதில் நிலைக்க வைத்தது.
இந்நிலையில், லியோ படத்தில் மாயா கிருஷ்ணன் இணைந்திருப்பது, இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. லியோவில் மாயா கிருஷ்ணன் இணைந்துள்ளது, இந்தப் படம் விக்ரமின் ப்ரீக்வெல்லாக இருக்கும் என யூகிக்க வைத்துள்ளது. விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினாவாக நடித்த டான்ஸர் வசந்தி லியோவில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது மாயா கிருஷ்ணனும் லியோவில் இணைந்துள்ளார். இந்த இரண்டு கேரக்டர்களுமே விக்ரம் படத்தில் உயிரிழந்துவிடுவார்கள் .
இதனால், விக்ரம் படத்தின் ப்ரீக்வெல் தான் லியோ என ரசிகர்கள் சீரியஸ்ஸாக டிஸ்கஸ் செய்து வருகின்றனர். அதேபோல், இது கைதி படத்தின் சீக்வெல்லாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கைதியில் போலீஸாக கலக்கிய நடிகர் ஜார்ஜ் மரியானும் லியோவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!