• Nov 10 2024

'மீனா 40'.. இன்றைய தினம் நடக்கவுள்ள பிரமாண்ட விழா.. எமோஷனல் வீடியோ வெளியிட்ட மீனா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தொடர்ந்து ராஜ்கிரன் நடிப்பில் வெளியாகியிருந்த 'என் ராசாவின் மனசிலே' என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினவர் நடிகை மீனா. இதனை அடுத்து ரஜினி,கமல்ஹாசன், அஜித், பார்த்திபன், சத்யராஜ், சரத்குமார் என பல் முன்னணி ஹீரோக்களுனும் இணைந்து நடித்திருக்கின்றார்.


தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்து வந்த மீனா கடந்த 2009-ஆம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு நைனிகா என்ற பெண் மகளும் உள்ளார். அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு தான் மீனாவின் கணவர் இறப்புக்குள்ளானார். அந்தக் கவலையிலிருந்து தற்போது சற்று மீண்டு வந்திருக்கின்றார்.


இந்நிலையில் மீனா திரையில் நடிக்கத் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் 'மீனா 40' என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வந்திருந்தனர். அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனையடுத்து மீனா தற்போது இதுகுறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் "RK மாநாட்டில் இன்றைய தினம் மாலை 5மணிக்கு 'மீனா 40' என்ற நிகழ்ச்சி நடைபெறப்போகிறது. இது எனக்கு மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், பெருமிதமாகவும் இருக்கின்றது. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை" என ரொம்பவே எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement