தமிழ் சினிமாவில் 1980 களில் குழந்தை நட்சத்திரமாகியவர் தான் நடிகை மீனா. இவர் இதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசினிலே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இதனைத் தொடர்ந்து 90களில் ரஜினி கமல் அஜித் பார்த்திபன் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
மேலும் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.தொடர்ந்து கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மீனா நடித்து வருகின்றார். இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததோடு கடந்த ஆண்டு இறப்புக்குள்ளானார்.
கணவரின் இறப்பிலிருந்து மீண்டு வந்த மீனா மீண்டும் தனது கெரியரில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்நிலையில் மீனா சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதைக் கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சியை அவரின் திரையுலக நண்பர்கள் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் அழைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
Listen News!