• Sep 20 2024

2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த நடிகை மீனா! குவியும் வாழ்த்து...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.  இந்தியா உட்பட சுமார் 10 நாடுகளை சேர்ந்த அணிகள், உலக கோப்பை விளையாட்டில் கலந்து கொள்ள உள்ளது.


மேலும் இந்த முறை கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு இந்திய மண்ணில் நடைபெற உள்ளதால், இந்திய நடிகையான மீனா 2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


இந்த உலக கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை  அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ’உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன். என்று மிகவும் பெருமையாக  தெரிவித்துள்ளார். 


மேலும் உலகக்கோப்ப கிரிக்கெட் போட்டியின் வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். தற்போது 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின், பிரம்மாண்டமான கோப்பையுடன் நடிகை மீனா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement