தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவின் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
டாப் ஹீரோயினாக இருந்த மீனா தற்போது பிரபலமான துணை நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் மீனா.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது கணவர் வித்யாசாகர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து, ஆபத்தான நிலைக்கு சென்றதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிழந்து நிலையில் உறவினர்களும் பிரபலங்களும் ஒன்று கூடிய நிலையில் பெசன்ட் நகரில் உள்ள தகண மையத்தில் சரியாக 3.30 மணியளவில் தகணம் செய்யப்பட்டது.
இவ்வாறு இருக்கையில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதாவது தனது கணவனின் உடல் சுடுகாட்டில் எரியுட்டப்பட்ட நிலையில் அஸ்தியை வாங்குவதற்காக நடிகை மீனா நிறைய நேரம் காத்திருந்ததாகவும் காத்திருந்த நேரத்தில் ரம்மா மற்றும் சங்கீதா ஆகியோர் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில் அவர்களோடு மீனா சிரித்து பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வளவு சோகத்திலும் மீனாவால் எப்படி சிரித்திருக்க முடியும்.இந்த விசயத்தை கேட்ட மக்களுக்கே எவ்வளவு பெரிய சோகமாக உள்ள போது இப்படி சிரிப்பதா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் ஒரு சில ரசிகர்கள் இவர் இப்படி சோகமாக இருக்கும் நிலையில் இது தேவையா..? சிரிப்பது சங்கீதா தான் மீனா பக்கத்தில் தான் உள்ளார்.ஏன் இப்படி கூறுகிறீர்கள்..? ஒருவர் சோகத்தில் இருக்கும் போது இந்த விமர்சனம் தேவை தானா ..? எனவும் கூறி வருகிறார்கள்.
பிற செய்திகள்
- கடலின் நடுவே கவர்ச்சி-ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
- மயானம் நோக்கி மீனாவின் கணவர்.. கதறி துடித்த அவரது மகள்… படங்கள் இணைப்பு..!
- நடிகை மீனாவின் கணவர் யார்..?பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ..!
- நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்காரில் இருந்த அழைப்பு!
- ‘அந்த’ இடத்தில் வளையம் போட வாக்கெடுப்பு நடத்திய பிக்பாஸ் அபிராமி…குமுறும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!