• Sep 20 2024

சத்யாவால் மீண்டும் உடையும் மீனா-முத்து வாழ்க்கை! சிட்டியின் மாஸ்டர் பிளான்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், அவர் காரை வித்திட்டு ஆட்டோ ஓட்டுகிறார் என்று எனக்கு நல்லாவே தெரியும். அப்படி என்ன அவருக்கு பணத் தேவை வந்துச்சு என்று செல்வத்திடம் மீனா கேட்க, நாங்க கட்ட வேண்டிய பணம் எல்லாத்தையும் கேட்டு சிட்டி பிரச்சனை பண்ணிட்டான். அதனால தான் முத்து இப்படி செய்தான் என்று  செல்வம் சொல்ல, நான் அவனை சும்மா விடமாட்டேன் என்று கிளம்பி செல்கிறார் மீனா.

இதை அடுத்து சிட்டியின் ஆபீசுக்கு சென்ற மீனா, ஏய்.. சிட்டி இன்னொரு தடவை என் புருஷன் வழியில வந்தேன்னு தெரிஞ்சுது  அசிங்கப்பட்டுடுவ அப்படி என்று திட்டி செல்கிறார் மீனா.


இதை தொடர்ந்து இவர்களை சும்மா விடக்கூடாது மீனாவையும்  முத்துவையும் பிரிக்கோணும் என சிட்டி சொல்ல, அது எப்படி  முடியும் என அவரிடம் இருந்த ஆட்கள் கேட்கிறார்கள். அதற்குத்தான் சத்யா இருக்கானே என்று சொல்கிறார் சிட்டி.

அதன்பின் வீட்டுக்கு வந்த மீனா முத்துவிடம், நீங்க எதற்காக காரை வித்தீங்க என்று எனக்குத் தெரியும். என்கிட்ட சரி சொல்லி இருக்கலாமே சொல்கிறார்.  இதுதான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement