• Sep 20 2024

முத்துவைப் பிரிந்து தன்னுடைய வீட்டுக்குப் போன மீனா- அண்ணாமலை எடுத்த முடிவு- Siragadikka Aasai Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது மீனாவின் அம்மா வந்து ஆடி மாதம் தொடங்கி விட்டது என தங்களுடைய வீட்டுக்கு மீனாவைக் கூட்டிக் கொண்டு போக வருகின்றனர். அப்போது மீனா மாமனாரை கவனாக மாத்திரை எல்லாம் எடுத்து போடச் சொல்லி விட்டு போகின்றார். மீனாவை பிரிய மனம் இல்லாமல் முத்து அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் தன்னுடைய அப்பாவிடம் சென்று மீனாவைக் கூட்டிட்டு போன மாதிரி அம்மாவும் தங்களுடைய வீட்டுக்கு போகமாட்டாங்களா என்று கேட்க, எதுக்குடா என்று அண்ணாமலை கேட்க, இல்ல அம்மாவும் வீட்டை விட்டு போனால் ஒரு மாதம் நீ சந்தோஷமாக இருப்ப என்று சொன்னேன் என்று நக்கலாக சொல்லிட்டு போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement