80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அதுமட்டுமல்லாது அந்தக் காலத்தில் ராதிகாவின் நடிப்பில் வெளியாகும் படங்களிற்கென காத்துக் கிடந்த இளசுகள் பட்டாளமோ ஏராளம். அந்த அளவிற்கு பல இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருந்தார்.
இவ்வாறாக படங்களில் சிறப்பாக நடித்து வந்த இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார்.
த்ரில்லர் படமாக உருவாகி வரும் 'கொலை' படத்தை 'விடியும் முன்' பட இயக்குநர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார். அத்தோடு இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார். இவர்களுடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் ராதிகா சரத்குமார் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதற்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகை மீனாவின் தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கின்றார். அந்தவகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதில் ராதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதோடு, அவரின் 44 வருட திரைப்பயணத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
மீனாவின் இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு பல ரசிகர், ரசிகர்களும் தமது வாழ்த்துக்களினை கமெண்டுகளின் மூலமாக ராதிகாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!