தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் மீனாவின் கணவர் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சோகத்தில் மூழ்கி இருந்த மீனா தற்போது தான் படிப்படியாக மகிழ்ச்சியான நிலைக்கு வந்துள்ளதோடு பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்கு பற்றி வருகின்றார்.
அவரது தோழிகளாக இருக்கும் பல முக்கிய நடிகைகள் அவருடன் அடிக்கடி நேரம் செலவிட்டு வந்த புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று மீனாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு சினேகா, சங்கவி உள்ளிட்ட பல நடிகைகள் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர்.
மீனா மகிழ்ச்சியாக கேக் வெட்டி அவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.
Listen News!