• Sep 20 2024

இறந்த கணவர் பற்றி மீனாவின் லேட்டஸ்ட் பதிவு-ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

யாரும் எதிர்பாராத விதமாக நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் கடந்த மாதம் 28ஆம் தேதி நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு தான் திருமணம் நடை பெற்றது.

இவர்களுக்கு நைனிகா என்னும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இளம் குடும்பமாக வலம் வந்த இவர்களது வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது மகிவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. மேலும் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்

இந்நிலையில் (ஜூலை 12,2022) மீனாவின் 13ம் திருமண நாள். கொண்டாட வேண்டிய நேரத்தில் கணவரை இழந்து இப்படி துயரத்தில் இருக்கும் மீனா சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

"எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள். ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க."

"உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பும் எல்லோருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி சொல்கிறோம். அது எங்களுக்கு இப்போது அதிகம் தேவை.

"இப்படி ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பம் இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என மீனா பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement