• Nov 17 2024

நாற்பது வயதிலும் நச்சுன்னு இருக்கும் மீரா ஜாஸ்மின்…இவ்வளவு அழகாக இருக்காங்களே!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் ஒருகாலத்தில் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் சினிமாவில் 'ரன், சண்டைக்கோழி, ஆயுத எழுத்து' உட்படப் பல படங்களில் நடித்துப் பிரபல்யமானவர். இதனை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகரிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் மாண்டலின் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். ஆனாலும் அந்த காதல் சில சிக்கல்களில் சிக்கி தோல்வியிலேயே முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் படங்கள் எதிலும் கமிட்டாகாமல் தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த சென்று விட்டார். அதாவது 2014-ஆம் ஆண்டு அனில் ஜான் டைட்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கின்றார். அத்தோடு முன்பை விட படு மாஸாக கிளாமராக புதிய மீராவாக புது அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது கவர்ச்சி உடையில் கிளாமராக எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் நச்சுனு சும்மா அழகாக இருக்காங்களே எனப் புகழ்ந்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement