தெலுங்குத் திரையுலகில் நடிப்புத் துறையில் வெற்றிக் கொடி நாட்டிய பிரபலங்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. மெகா ஸ்டார் என சிறப்பாக அழைக்கப்படும் இவர் தெலுங்கு திரைப்பட நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார். நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டுள்ள இவர் 1977-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி முன்னணி நடிகராக இன்றும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதை 2006 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றார். 2008-ஆம் ஆண்டு 'பிரஜா ராஜ்ஜியம் கட்சி' என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தையம் தொடங்கி வைத்துள்ளார். இவ்வாறு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் 2009-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றி பெற்றார். மேலும் 2011 இல் இராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சியில் இணைந்து கொண்டார்.
இவ்வாறு தனது அரசியல் மற்றும் சினிமா என பிஸியான ஸ்செடுளிற்கு மத்தியிலும் நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு நடிகர் கைகாலா சத்யநாராயணாவின் இல்லத்திற்குச் சென்று அவரது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அதாவது தற்போது 'ஹாட் பாதர்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி நேற்றைய தினம் நேரம் ஒதுக்கி, அவரது பிறந்தநாளைக் கொண்டாட ஹைதராபாத்தில் உள்ள மூத்த தெலுங்கு நடிகர் கைகாலா சத்யநாராயணாவினுடைய இல்லத்திற்குச் சென்றார்.
முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருக்கும் சத்யநாராயணாவை மகிழ்விக்க சிரஞ்சீவி கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். சிரஞ்சீவியின் இந்த செயலிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவரின் ரசிகர்கள் அவரிற்கு வாழ்த்து மழையினையும் பொழிந்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- தமிழ் சினிமாவின் நகைச்சுவைகளில் அறிவார்ந்த காலம் மலையேறி விட்டதா..?
- ஆர்யா-சந்தானத்துடன் மீண்டும் இணையும் கலக்கல் காமெடி திரைப்படம்…உருவாகவுள்ள பாகம்-2..!
- தாவணி போட்ட தீபாவளி பாடலில் இருந்து இன்றுவரை…நாங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி; நடிகர் விஷால்
- பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்…அதிர்ச்சியில் திரையுலகம்..!
- வைற் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மாளவிகா…அடுத்த உலக அழகி இவங்க தான் போல…வைரலாகும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!