• Nov 10 2024

அச்சத்தில் மேகன், அரச குடும்பத்தினரால் ஏற்படவிருக்கும் பேராபத்து குறித்த கலக்கத்தில் இருவரும்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

மன்னர் சார்லஸ் மற்றும் வில்லியம் ஆலோசனையின் படியே, ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.இதுபோன்ற இக்கட்டான சூழலில் தாம் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹரி - மேகன் அச்சம் தெரிவித்துள்ளார்.தற்போதைய வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் மகனான இளவரசர் ஜோர்ஜ் காரணமாக தமது எதிர்காலம் தொடர்பில் ஹரி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் தமக்கும் ஏற்படலாம் என்றே ஹரி அஞ்சுவதாக கூறப்படுகிறது. குட்டி இளவரசர் ஜோர்ஜ் 18 வயதைக் கடந்தால், அவருக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.அப்போது இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரண்மனைக்கு பொருத்தமற்றவர்கள்  என மொத்தமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே மேகன் அஞ்சுவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது 62 வயதாகும் இளவரசர் ஆண்ட்ரூ ராஜகுடும்பத்தில் செயல்படும் உறுப்பினராக இல்லை. மேலும், ஆண்ட்ரூவால் ஏற்பட்ட விவாதங்கள் காரணமாக தற்போதைய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் வில்லியம் ஆகியோரின் ஆலோசனையின் படியே, ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.

தற்போது அவர் இளவரசர் ஹரி போன்று செயற்படாத உறுப்பினர் வரிசையில் உள்ளார். இந்த நிலையில், தமது 60 வயதில், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தாம் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹரி அச்சம் தெரிவித்துள்ளார்.ராணியாரின் செல்லப்பிள்ளை என்பதாலையே, அவர் மொத்தமாக ஒதுக்கப்படாமல் இருந்து வந்தார்.

மேலும், குட்டி இளவரசர் ஜோர்ஜ் உரிய பொறுப்புக்கு வரும் முன்னர், அதாவது அவருக்கு 18 வயதாகும் முன்னர் தமது இருப்பை தக்கவைக்க வேண்டும் என ஹரி முடிவு செய்துள்ளதாகவும், தற்போது தமக்கு ஆதரவாக ராணியாரும் இல்லை என்பதால், எதிர்காலம் சிக்கலில் முடியலாம் என ஹரி கருதுவதாக கூறப்படுகிறது

Advertisement

Advertisement