மேகன் பிரித்தானியாவுக்கு முதல் முறை வந்தபோது, கமீலா மேகனை அன்புடன் வரவேற்றார் என்கிறார்.புதிதாக ராஜகுடும்பத்துக்குள் வரும் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் என்னென்ன என்பதை நன்கறிந்த கமீலா, தன்னைப்போலவே புதிதாக வந்த மேகனுடன் அவ்வப்போது உணவருந்துவதுடன், ராஜகுடும்ப அழுத்தங்களை சமாளிப்பது எப்படி என மேகனுக்கு ஆலோசனை கூறுவாராம்.
ஆனால், மேகனுக்கோ, கமீலாவின் ஆலோசனைகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே, அவரை அலட்சியம் செய்த மேகன், தான் தன் வழியே போகத்துவங்கியிருக்கிறார்.ஆனால், அந்த கமீலா, மன்னரின் மனைவி, பிரித்தானிய மக்களின் ராணி ஆவார் என இந்த மேகனோ, அந்த டயானாவோ நினைத்துப் பார்க்கவில்லை போலும்.ஆனால், அன்று ராஜகுடும்பப் பெண்களால் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட கமீலாவோ, இன்று மன்னரின் மனைவியாகியிருக்கிறார்.
கமீலாவை மக்கள் ராணி என ஏற்றுக்கொள்ளவேண்டும் என மறைந்த மகாராணியார் கேட்டுக்கொள்ள, மக்களில் ஒரு கூட்டத்தாரும் அவரை இப்போது ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.ஆனால், டயானாவும் சரி, மேகனும் சரி, ராஜகுடும்பத்தில் வாழ தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அலட்சியப்படுத்திவிட்டார்கள், அதன் பலனை அனுபவித்தும்விட்டார்கள்!
Listen News!