• Sep 20 2024

தமிழ் மீது காதல் வயப்பட்ட மேக்னா- சரஸ்வதி பற்றிய உண்மையை மறைத்த நமச்சி- செம குஷியில் தமிழ்- Thamizhum Saraswathiyum Serial

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது  என்று பார்ப்போம்.

மேக்னா கல்யாணமானவங்களுக்கு ஹெல்ப் பண்ணமாட்டா, ஆனால் தமிழ் எப்படி என்று தெரியலையே என்று மாமாசேர் தன்னுடைய மகனிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். இதைக் கேட்ட நமச்சி இந்த வாய்ப்பை விட்டிடவே கூடாது என்ன பண்ணலாம் என்று யோசிக்கின்றார்.

தொடர்ந்து தமிழ் தங்களுடைய வீட்டுக்கு வரப்போகின்றார் என்பதற்காக மேக்னா பல புடைவைகளை மாற்றி மாற்றி இது எப்படி இருக்கு என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார். அவரும் தமிழ் வரப் போற சந்தோஷம் உன் முகத்திலையே தெரியுது என்று அவரும் சந்தோஷப்படுகின்றார்.


தொடர்ந்து தமிழ் வந்ததும் தானே வாசலில் நின்று வரவேற்று உள்ளே கூட்டிட்டு போகின்றார். இதைப் பார்த்த மாமாசேரின் மகன் கோபப்படுகின்றார்.அப்போது மேக்னா தமிழ் பற்றி விசாரிக்கின்றார். தொடர்ந்து தன் கையாலே சாப்பாடு பரிமாறும் போது தமிழ் குடும்பத்தை பற்றி சொல்ல வர நமச்சி தமிழ் மீது யூஸ் ஊற்றி விடுகின்றார்.


இதனால் தமிழ் எழும்பி வோஷ் ரூம் போய் விட நமச்சி தமிழுக்கு கல்யாணம் ஆகல, வாழ்க்கையில ஜெயிச்சப்பிறகு தான் கல்யாணம் பண்ணணிககோணும் என்ற கொள்கையில் இருக்காரு என்று சொல்ல இதைக் கேட்ட மேக்னா சந்தோஷப்படுகின்றார். பின்னர் மேக்னா வேலைக்கு வந்தவங்களையே அம்மா என்று உரிமையோடு அழைப்பதைப் பார்த்த தமிழ் மேக்னாவைப் பாராட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement