விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில் senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அதில் Dedication Round இடம்பெறுகின்றது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக பாடல் பாடுகின்றனர். அந்தவகையில் அப்பா, அம்மா, நண்பர்கள் என தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு டெடிகேட் செய்கின்றனர். அந்த சமயத்தில் உடன் இருந்தவர்களும் அவர்களின் உணர்ச்சி பூர்வமான தருணங்களை பார்த்துக் கண்கலங்கி அழுகின்றனர்.
இதில் மேக்னா என்ற சிறுமி "பூவே பூச்சூடவா.." என்ற பாடலை பாடகி சித்ராவிற்கு டெடிகேட் செய்து பாடுகின்றார். இதனைப் பார்த்த நடுவர் தமன் "சித்ரா அம்மாவிற்காக பாட சொல்லி உனக்கு யார் சொன்ன" எனக் கேட்டு மிரட்டுகின்றார். அதற்கு அவர் எனக்கு அவங்கள பிடிக்கும் எனப் பதிலளிக்கின்றார்.
உடனே சித்ராவும் மேடையில் ஓடி வந்து மேக்னாவை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கின்றார்
Listen News!