• Sep 20 2024

தமிழையும் சரஸ்வதியையும் பிரிக்க நினைக்கும் மேக்னா- மேக்னாவுக்கு சார்பாக கோதை செய்த காரியம்- Thamizhum Saraswathiyum Promo

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் தமிழ் வீட்டுக்கு வந்த மேக்னாவை, கோதை வரவேற்று உபசரித்ததோடு தமிழும் மேக்னாவும் சேர்ந்து கோதையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். அத்தோடு மேக்னாவுக்கு கோதை தலையில் பூ வைத்தும் விடுகின்றார்.

தொடர்ந்து அங்கு சரஸ்வதி வர,நமச்சி அதிர்ச்சியடைகின்றார். அப்போது சரஸ்வதி வாங்க மேக்னா எப்போ வந்தீங்க கை சுகமா என நலம் விசாரிக்கின்றார்.


இதனால் அதற்கு பதில் சொல்லி விட்டு கிளம்பிய மேக்னா, இந்த சரஸ்வதி எதுக்கு தமிழ் கூட இருக்கிறா,கல்யாணத்திற்கு பிறகு சரஸ்வதியை தமிழ் கிட்ட இருந்து முதல்ல பிரிக்கோனும் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement