தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டி பத்மினி, தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில், பல பிரபலங்கள் குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நான் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் போது எனக்கு வயது வெறும் ஆறுதான். என் அம்மாவாவும் ஜானகி அம்மாவும் நண்பர்கள் என்பதால் நான் அவங்க வீட்டுக்கு போய் இருக்கிறேன். நான் அவரை அங்கிள் என்று கூப்பிட்டால் திட்டி, மாமானு கூப்பிட சொல்லுவார். அவங்க வீட்டுக்கு போனால் சாக்லெட் கொடுக்காம அனுப்பவே மாட்டார் அவ்வளவு பாசமாக பார்த்துக்கொள்வார்.
எம்.ஜி.ஆரை பற்றி பல தகவல்கள் யாருக்கும் தெரியாமலே உள்ளது. ஆனால், அவர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில் பல தகவல்கள் இருக்கிறது. எம்ஜிஆர். இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் மற்றும் சத்யபாமா தம்பதியினருக்கு 5வது மகனாக பிறந்தார்.
தந்தையின் மறைவுக்குப்பின் இலங்கையில் இருந்து வெளியேறி கும்பகோணத்தில், சத்யபாமாவின் தம்பி நாராயணன் வீட்டில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால், நாடக நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்தில் நடித்து பெயர் எடுத்த எம்.ஜி.ஆர், தனது அயரா உழைப்பால முன்னேறி முக்கிய நடிகரானார்.
முன்னணி நடிகரான போது கும்பகோணத்தில் மாமா வீட்டில் இருந்து வெளியேறும் போதுதான். சில ஆண்டுகளுக்கு முன், ஏதோ ஒரு பிரச்சனையில் அம்மாவை மாமா நாராயணன் அடித்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரிய வர, சொந்த மாமா என்று கூட பார்க்காமல், அம்மாவை நாற்காலியில் அமரவைத்துவிட்டு, செருப்பை எடுத்து அடித்து இருக்கிறார். அந்த அளவுக்கு அம்மா மீது அதீத அன்பு கொண்டவராக எம்ஜிஆர் இருக்கிறார். அவர்களுடைய அம்மாவும் எம்ஜிஆர் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார்கள்.
எம்ஜிஆருக்கு கருவாட்டுக்குழம்பு பிடிக்கும் என்பதற்காக அவரது தாயார் படப்பிடிப்பு கருவாட்டுக்குழம்பு செய்து அனுப்புவார்கள். அந்த குழம்பு வாசனை செட்டையை தூக்கும் அளவிற்கு இருக்கும், சிவாஜி கணேசனும் எம்ஜிஆர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்ததும் எங்கிருந்தாலும் சாப்பிட ஓடிவிடுவார். எம்ஜிஆருக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் சேர்ந்து உணவு அனுப்புவார்கள் என்று எம்ஜிஆர் குறித்து பல விஷயங்களை குட்டி பத்மினி அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
Listen News!