• Nov 19 2024

கடன் தொல்லையால் சொந்த வீட்டை இழக்கப் பார்த்த எம்.ஜி.ஆர்- இதற்கு இந்தப் படம் தான் காரணமா?

MGR
stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் எம்.ஜி.ஆர் சம்பாதித்த பணம், புகழ் எல்லாவே அதன் பின்னர்தான். அதனால்தான், தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் அள்ளி கொடுத்த வள்ளலாக இருந்தார். தன் முன்னே யாரும் பசியோடு இருக்க கூடாது, கஷ்டப்படக்கூடாது என்கிற குணம் கொண்டவராக இருந்தார்.எம்.ஜி.ஆர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் சொந்த பணத்தை போட்டு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். 

அப்படி அவர் முதல் ரிஸ்க் எடுத்தது நாடோடி மன்னன் படத்தில்தான். அப்படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். அப்படத்திற்கு முன் அவர் சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் முதலீடு செய்தார். கடனும் வாங்கியியிருந்தார். ‘இந்த படம் ஓடினால் நான் மன்னன்.. இல்லையேல் நான் நாடோடி’ என சொல்லியர் அவர். ஆனால், நாடோடி மன்னன் படம் சூப்பர் ஹிட் ஆனது.


அதன்பின் சில வருடங்கள் கழித்து அவர் தயாரித்து, இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். தன் வாழ்நாளில் இந்த படத்திற்கு அவர் சந்தித்த பிரச்சனை போல் எப்போதும் அவர் சந்தித்திருக்க மாட்டார். இந்த படத்திலும் தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தார். அது இல்லாமல் நிறைய கடனும் வாங்கியிருந்தார். 

படத்தின் படப்பிடிப்பு பாங்காங், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் நடத்தினார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவானது. எம்.ஜி.ஆர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் அறை ஒதுக்கப்பட்டது. அவருக்கு என்ன உணவு பறிமாறப்படுகிறதோ அதோ உணவு எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இதனால், பட்ஜெட் தாறுமாறாக எகிறியது.


படம் உருவாகி கொண்டிருந்த போது கடன் கொடுத்தவர்கள் எம்.ஜி.ஆரை நெருக்கினார்கள். படம் ரிலீஸ் ஆகட்டும் என எம்.ஜி.ஆர் சொல்லியும் அவர்கள் காத்திருக்கவில்லை. அவர் வசித்து வந்த ராமாபுரம் வீட்டை ஜப்தி செய்ய முயற்சி செய்தனர். இதை அறிந்த எம்.ஜி.ஆர் நீதிமன்றத்தில் அதற்கு தடை வாங்கினார். அதன்பின் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. கடன் கொடுத்த எல்லோருக்கும் வட்டியுடன் திருப்பி கொடுத்தார்.

Advertisement

Advertisement