• Nov 10 2024

சந்தீப் கிஷனின் மைக்கேல் திரைவிமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் மைக்கேல்.மேலும் இப்படத்தின் First லுக் வெளிவந்த சமயத்தில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் தனி எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ப்ரோமோஷன் அமைந்தது.

அதிலும் ட்ரைலரில் இடம்பெறும் 'ஒரு பெண்ணுக்காக இல்லனா, எதுக்கு சார் ஒரு மனுஷன் வாழனும்' என்ற வாசம் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவியது.அத்தோடு இத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..

தனது தாய்க்கு தோரகம் செய்த தனது தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கேல் {சந்தீப் கிஷன்}. மும்பையில் தந்தையை தேடி அலையும் மைக்கேல் ஒருவழியாக தனது தந்தையை கண்டுபிடிக்கிறார். தாய்யை நம்பவைத்து ஏமாற்றியதற்காக தந்தையை கொள்ள கையில் கத்தியுடன் செல்லும் மைக்கேலுக்கு, மும்பை டான் குருநாத்தின் {கவுதம் மேனன்} அறிமுகம் ஏற்படுகிறது.


இந்த சமயத்தில் கவுதம் மேனனை கொலை செய்ய நபர் ஒருவர் வருகிறர். கொலை செய்ய வரும் அந்த நபரிடம் இருந்து கவுதம் மேனனை காப்பாற்றும் மைக்கேல், அதன்பின் கவுதம் மேனனின் பாதுகாப்பில் வளருகிறார். சில வருடங்கள் ஆன நிலையில், மாபெரும் டான் கவுதம் மேனனை கொலை செய்ய சில முக்கிய புள்ளிகள் இணைந்து திட்டம் தீட்டி அதை செயல்படுத்துகிறார்கள்.

இந்த சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளும் கவுதம் மேனனை இளமை பருவத்தை அடைந்த கதாநாயகன் மைக்கேல் மீண்டும் காப்பற்றுகிறார். இதன்பின் கவுதம் மேனனின் நம்பிக்கைக்குரிய அடியாட்களில் ஒருவராக மாறும் மைக்கேல், கவுதம் மேனன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியா ஒன்றை பார்த்துக்கொள்கிறார். தன்னை கொள்ள திட்டமிட்ட 6 முக்கிய புள்ளிகளில் 5 நபர்களை கவுதம் மேனன் பிடித்துவிடுகிறார். பிஞ்சி இருக்கும் அந்த 6வது நபரையும், அவருடைய மகளையும் கொன்று விட்டு வரும்படி மைக்கேலிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் கவுதம் மேனன்.

அதன்படி, மைக்கேல் டெல்லி புறப்பட்டு சென்று அந்த 6வது நபரின் மகளை ஃபாலோ செய்யும் சமயத்தில், அந்த பெண் மீது காதலில் விழுகிறார் மைக்கேல். இதனால் அந்த பெண்ணையும், பெண்ணின் தந்தையையும் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்.அத்தோடு சொன்னதை செய்யாத மைக்கேலையும், அந்த பெண்ணையும், பெண்ணின் தந்தையையும் அடியாட்கள் வைத்து தூக்குகிறார் கவுதம் மேனனின் மகன்.

பலமாக அடிவாங்கி ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் இருக்கும் கதாநாயகன் மைக்கேலை துப்பாக்கியால் சுட்டு, தண்ணீரில் தூக்கி எறிகிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்ட மைக்கேல் என்னவானார்? கதாநாயகியை காப்பற்ற மீண்டு வந்தாரா? மும்பைக்கு மைக்கேல் வந்த காரணம் இறுதியில் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதையாக உள்ளது.


கதாநாயகனாக வரும் சந்தீப் கிஷன் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அத்தோடு ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் மிரட்டுகிறார். அதற்காக தனி பாராட்டு. அத்தோடு கதையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும் கதாநாயகி திவ்யன்ஷா கௌஷிக் சொதப்பாமல் நடித்துள்ளார்.

வில்லனாக வரும் கவுதம் மேனன் பட்டையை கிளப்புகிறார். கேமியோ கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி கதைக்கு பலமாக அமைத்துள்ளார். எனினும் அதே போல் வரலக்ஷ்மி சரத்குமார் கொடுத்த கதாபாத்திரத்தில் என்ன செய்யமுடியுமா அதை செய்துள்ளார். அய்யப்பா பி. ஷர்மா மற்றும் அனுஷ்யா பரத்வாஜ் இருவரின் நடிப்பும் ஓகே. மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார்கள்.


இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்துக்கொண்ட காதல் கலந்த ஆக்ஷன் கதைக்களம் பக்கா. ஆனாலும் அதனை வடிவமைத்த விதத்தில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். ஆம், திரைக்கதையில் விறுவிறுப்பில்லை. படத்தில் சண்டை காட்சிகள் இருக்கலாம், ஆனாலும் இங்கோ சண்டை காட்சிகளில் தான் படத்தை தேட வேண்டியதா அமைந்துள்ளது.

ஹீரோவிற்காக மற்ற அனைவரும் கொடுக்கும் பில்டப் வலுவாக இருந்தாலும், ஹீரோவின் கதாபாத்திரம் அந்த பில்டப்புக்கு ஏற்ப வலுவாக இல்லை. இதுவே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். கைதட்டல் அல்ல வேண்டிய பல காட்சிகள் சொதப்பலாகிவிட்டது. ஆனால் இறுதியில் வந்த எதிர்பார்க்காத திருப்பம் இரண்டாம் பாகத்திற்கு படத்தை அழைத்து செல்கிறது.


ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சாம் சி.எஸ். பாடல்கள் எடுபடவில்லை. ஆனால் பின்னணி இசை சூப்பர். எடிட்டிங் ஓகே. சண்டை காட்சிகளை வடிவமைத்த விதம் அற்புதம்.


பிளஸ் பாயிண்ட்


சந்தீப் கிஷன், கவுதம் மேனன்


எடுத்துக்கொண்ட கதைக்களம்


மைனஸ் பாயிண்ட்


விறுவிறுப்பில்லாத திரைக்கதை


பில்டப்புக்கு ஏற்ப வலுவாக இல்லாத ஹீரோயின் கதாபாத்திரம்


Advertisement

Advertisement