• Sep 20 2024

’கோட்’ படத்தில் மைக் மோகன் வில்லன் இல்லையா? விஜய் கேரக்டரில் ஒரு திருப்பம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 90களில் பிரபலமாக இருந்த மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு மைக் மோகன் தான் இந்த படத்தின் வில்லன் என்றும் விஜய் மற்றும் மைக் மோகன் இடையே ஸ்டண்ட் காட்சியும் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் இந்த படத்தில் இரண்டு கேரக்டரில் தந்தை, மகன் என நடித்து வரும் நிலையில் அதில் ஒரு கேரக்டர் தான் வில்லன் என்று அவருக்கு துணையாக தான் மைக் மோகன் இன்னொரு வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.



இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement