90 - ஸ் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் மைக் மோகன்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளில் பிஸியாக நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகராக உயர்ந்தார்.
மோகன் படங்கள் என்றால் ஞாபகம் வருவது அவர் படத்தில் பேசும் மென்மையான குரல். எனினும் இதற்காகவே பல ரசிகர் கூட்டம் இவருக்கு இருந்தார்கள். ஆனால் அது அவரின் நிஜ குரல் இல்லை. இவர் படங்களுக்கு டப் செய்தவர் அவரின் நண்பர் சுரேந்தர்.
"மோகன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் என்னுடைய குரல் தான்" என்று சுரேந்தர் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைதொடரந்து சுரேந்தர், நடிகர் மோகன் படங்களுக்கு டப் செய்வது நிறுத்திவிட்டார்.
இதன் பிறகு வெளிவந்த மோகனின் படங்கள் தோல்வியை சந்தித்தது. மோகன் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் தொடர் தோல்விகளால் இவர் தமிழ் சினிமாவை விட்டு நீங்கி விட்டார்.
மீண்டும் திரைத்துறையில் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் ஹரா என்ற படத்தில் கதாநாயகனான நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் குஷ்பூ, யோகி பாபு நடித்துள்ளனர்.
அத்தோடு இப்படத்தின் ஷட்டிங் பணிகள் முடிந்த நிலையில், தற்போது நடிகர் மோகனுக்கு யார் டப் செய்ய போகிறார் என கேள்வி எழுத்துள்ளது.
Listen News!