அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் 17 மணிநேர சோதனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா இல்லை கைதுசெய்யப்பட்டாரா என்பது குறித்தான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் சென்று வேண்டி பிரார்த்தித்துள்ளார்.
Listen News!