திரையுலகினர்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கிய அமைச்சர்.. சென்னைக்கு வரப்போகும் மாயாஜாலம்..!
சென்னையில் ரூபாய் 500 கோடி மதிப்பில் திரைப்பட நகரம் அமைக்க இருப்பதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திரை உலகினருக்காக ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் அதிநவீன திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்பட நகரில் திரையுலகினருக்கு தேவையான அனைத்து அம்சங்களும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி இருக்கும் நிலையில் அங்கு தான் பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையிலேயே ஒரு திரைப்பட நகரம் அமைந்தால் திரையுலகினருக்கு அது ஒரு மாயாஜாலம் தான் என்று கூறப்படுகிறது.
Listen News!