தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் பூர்ணா. இவர் மலையாள சினிமாவில் தான் முதல் முதலாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்த இவர் இதுவரை 60க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் தமிழில் கந்தகோட்டை,துரோகி, வேலுார் மாவட்டம், ஆடுபுலி ,தகராறு போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பின்பு படவாய்ப்புக்கள் குறைந்ததால் காப்பான்,சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவரின் கைவசம் தற்போது மிஷ்கினின் 'பிசாசு 2', அம்மாயி உள்ளிட்ட படங்கள் உள்ளன.நடிகை பூர்ணா நடிப்பில் அண்மையில் வெளியான 'விசித்திரன்' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் இப்படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார்.
மேலும் இதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி உள்ள 'பிசாசு 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா. இதையொட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணாவிடம், பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா 20 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க மறுத்திவிட்ட பூர்ணா, படம் ரிலீசாகும் போது உங்களுக்கு தெரியுமென கூறினார்.
அதனை தொடர்ந்து, இதுபோன்று நிர்வாண காட்சியில் நடிக்கச் சொல்லி உங்களை யாராவது அணுகியதுண்டா என்று கேட்கப்பட்ட போது, ஆம் என பதிலளித்த பூர்ணா, பெரிய ஓடிடி தளத்தில் இருந்து எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அந்த வெப் தொடரின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் அதில் ஒரு முக்கியமான காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டியிருந்தது. அதனால் அந்த தொடரில் நடிக்க மறுத்துவிட்டேன் என கூறினார்.
மிகவும் வருத்ததோடு தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறினேன். ஏனெனில் அந்த கதை எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த காட்சி அந்த தொடருக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அதனை என்னால் நடிக்க முடியாது மன்னித்துவிடுங்கள் என இயக்குனரிடம் கூறியதாக நடிகை பூர்ணா குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்:
- சிவா மனசுல சக்தி பட ஹீரோயினா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!
- ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் அசத்தல் கிளிக்ஸ்..!
- KGF 2 படத்தால் மிகப்பெரிய நஷ்டம்- இயக்குநர் ராம் கோபல்
- சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்..!
- விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் KRK-எத்தனை கோடி தெரியுமா..!
- குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கிக்கு கெட்டப் செலக்ட் பண்ணி கொடுப்பது இவர் தனாம்..!
- பாவ்னி – அமீர் கல்யாணம் நடக்குமா … தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!