இந்தியன் பாகம் ஒன்று ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த ஒரு திரைப்படம். தற்போது " இந்தியன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் காரணமாக படம் அடுத்தவருடம் தான் திரைக்கு வரவிருக்கிறது.
ரசிகர்களுக்கு பார்ப்பதற்க்கு இது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் சங்கர் அதிக கவனம் எடுத்து வேலைகளை செய்கிறார் போல இதனாலே 2024 பொங்கல் பண்டிகையையும் தவறவிட்டது இந்தியன் 2 திரைப்படம். இந்தியன் 2 ரிலீஸ் தள்ளி போனதனால் நடிகர் கமலாஹாசன் ரசிகர்கள் கவலையாக இருக்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட பல வருடங்களாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் "அயலான்". சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும் விஎஃப்எக்ஸ் வேலையால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பதால் அதிலும் கொஞ்சம் வேலை இருக்கிறதாம்.
சமீபத்தில் " மறக்குமா நெஞ்சம் "நிகழ்ச்சி மூலம் பெரிய சிக்கலில் ஏஆர் ரகுமான் சிக்கியிருந்ததால் இப்போது இந்த வேலை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் தீபாவளிக்கு அயலான் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போய் உள்ளது. சிவகார்த்திகேயன்ரசிகர்களும் இத்திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Listen News!