ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 வரும் 12ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால், மிஷன் இம்பாசிபிள் படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது வேகமெடுத்துள்ளது. இதனிடையே இப்படத்திற்கான ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நேற்று சென்னையில் திரையிடப்பட்டது.
இதனையடுத்து மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அதில் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு மிஷன் இம்பாசிபிள் ஒர்த்தான படம் தான் என்று கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்களையும் முழுமையாக விமர்சித்துள்ளார். அதாவது மிஷன் இம்பாசிபிள் படத்தின் கதை, உலகத்தை காப்பாற்றுவதற்காக ஹீரோ ஒரு சாவியை கண்டுபிடிப்பது தான். ஆனால், அதில் டாம் குரூஸ்ஸின் லைவ் ஆக்ஷன் தான் உயிர் கொடுத்துள்ளது என்றுள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாவியை காட்டும் இயக்குநர், அதேபோல் இருக்கும் இன்னொரு சாவியை கண்டுபிடிக்க ஹீரோ டாம் குரூஸ்ஸை களமிறக்குகிறார். அந்த சாவியும் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. ஆனால், இது மிக சாதாரண கதை தான் என்றாலும், ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது. அதேபோல், இப்படத்தில் கம்ப்யூட்டர் தான் வில்லன் எனவும், அதனை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக இயக்குநர் உருவாக்கியுள்ளார்.
பண்பாடு, கலாச்சாரத்தில் எம்ஜிஆருக்கே டஃப் கொடுத்துள்ள டாம் குரூஸ், ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதகளம் செய்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். முக்கியமாக டாம் குருஸ் மலை உச்சியில் இருந்து பைக்கில் குதிக்கும் காட்சி மிரட்டல் எனவும் புகழ்ந்துள்ளார். நல்ல சவுண்ட் எஃபெக்ட் உள்ள தியேட்டரில் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்க்கலாம் எனவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
Listen News!