• Nov 14 2024

சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு புது விளக்கம் கொடுத்த மோகன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம்  ரஜினிகாந்துக்கே வழங்கப்பட்டது என நடிகர் மோகன் கூறியுள்ளார்.

கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட  சிறிய ரக திரையரங்க திறப்பு விழா நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் நடிகர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மோகன், திரைத்துறை தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது : “காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்லூரி வளாகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பது பாராட்டுக்குரியது. இதற்காக கல்லூரி நிர்வாகத்துக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் மோகன்.

பொங்கல் வெளியிட்டு படங்களான துணிவு, வாரிசு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, எதற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன் என பதிலளித்த மோகன், விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான் என கூறினார். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம்  ரஜினிகாந்துக்கே வழங்கப்பட்டது என தெரிவித்தார். அத்தோடு கதை நன்றாக அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

எனினும் இதனை தொடர்ந்து கல்லூரியின் மினி திரையரங்கு திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய மோகன், ஹாரா திரைப்படத்தின் கதைக்களம் பிடித்ததால் நடித்து வருவதாகவும், நம் வாழும் நாட்டில் எல்லோரும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் எனவும், ஆனால் நம் நாட்டில் வழக்கறிஞர்கள் மட்டும்தான் அது தெரியும் என குறிப்பிட்டதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை சட்டங்களை கற்றுக் கொடுத்து விட்டால் ஒவ்வொருவரும் எப்படி வாழ முடியும், எப்படி வாழ முடியாது கற்றுக் கொண்டால் சமுதாயம் நன்றாக இருக்கும் எனவும் அதுதான் ஹாரா திரைபடத்தின் கதை கரு என கூறியதோடு, பள்ளி கல்லூரிகளில் அடிப்படை சட்டங்களை கற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வந்திருந்த அமைச்சர் எல்.முருகனிடம் நடிகர் மோகன் கோரிக்கை விடுத்தார்.




Advertisement

Advertisement