• Nov 17 2024

புதிய கார் வாங்கிய மோகன் லால்... விலை எத்தனை கோடி தெரியுமா... வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் உச்சநட்சத்திரமான மோகன் லால் பல மொழிகளிலும் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். கார் பிரியரான மோகன் லால் பல்வேறு சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது புதிதாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பையோகிராபி 4.4 V8 கார் மாடலை வாங்கியுள்ளார். கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட இந்த வெள்ளை நிற காரின் உடைய மதிப்பு 5கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


மேலும் கேரளாவின் கொச்சியில் உள்ள குண்டனூர் பகுதியில் இவர் வாங்கியுள்ள புதிய வீட்டில் வைத்து, இந்த புதிய சொகுசு கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தனது மனைவி சுசித்ரா உடன் சேர்ந்து காரின் சாவியை நடிகர் மோகன் லால் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த கார் ஆனது பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது ரேஞ்ச் ரோவரின் இந்த புதிய மாடல் காரானது ஐந்து வேரியண்ட்களில் உலகமெங்கும் கிடைக்கிறது, இதில் 2997சிசி டீசல் இன்ஜின் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது 2996cc, 2997cc, 2998cc, 4367cc மற்றும் 4395cc ஆகிய இன்ஜின் விருப்பங்களில் அடங்கும். 


இந்த வாகனம் ஆனது டைனமிக் ரெஸ்பான்ஸுடன் கூடிய மின்சார ஏர் சஸ்பென்ஷனையும், இரட்டை டர்போசார்ஜரையும் கொண்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை, வெறும் 6.1 விநாடிகளில் இந்த கார் எட்டிவிடும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் டிரைவிங் வசதியை மேம்படுத்த, இது அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங், முன் மற்றும் பின் பவர் ஜன்னல்கள் மற்றும் பவர் பூட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பாதுகாப்பு அம்சங்களில் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பாதுகாப்பான பிரேக்கிங்கிற்கான டார்க் வெக்டரிங் கொண்ட மின்னணு செயலில் வேறுபாடு ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயணிகள் வசதியை உறுதிப்படுத்த மூன்று மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டுள்ளது.

இந்நிலையில் இவர் வாங்கிய புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement