• Sep 20 2024

ரஜினியுடன் ஜெயிலர் சூட்டிங்கில் இணையும் மோகன்லால்.. சூட்டிங் இங்கே தானா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கில் படக்குழு ஈடுபடவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தற்போது அவரது அடுத்தப்படமான ஜெயிலர் படத்தை தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்தில் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாரித்த சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை சீரியஸ் களத்தில் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஜினியின் 169வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். மிகவும் எதிர்பார்ப்பிற்கு ஜெயிலர் படம் உள்ளாகியுள்ளது.

அத்தோடு இந்தப் படத்தின் புதிய வரவாக நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். இவரது இணைப்பு படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இவர் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இப் படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள நிலையில், ரஜினி மற்றும் மோகன்லால் காம்பினேஷன் காட்சிகள் ராஜஸ்தானில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷெட்யூல் மிகச்சிறிய நாட்களே நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் சூட்டிங் ராஜஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், அங்கேயே ஜெயிலர் சூட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


அனிருத் இசையில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீசாகவுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement