தமிழ் சினிமா பிரபலங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போதுசன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற எதிர்மறை வேடத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு can i call you என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய டுவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு அதுவே பேசுபொருளும் ஆகி இருந்தது.அதன் போது அவர் பல ஊடகங்களுக்கு சென்று பேட்டியும் கொடுத்து இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு இவர் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சின்னத்திரை வட்டாரா்த்திலே அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.அதாவது ஒரு நாளைக்கு 35ஆயிரம் வரை வாங்குவதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!