• Nov 17 2024

விஷால் எலிமினேசன் சர்ச்சை குறித்து விளக்கமளித்த மோனிஷா...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.அத்தோடு முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. எனினும் அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இவ்வாறுஇருக்கையில்  கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் மோனிஷாவும் ஒருவர் kpy நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். அத்தோடு இவர் மணிமேகலைக்கு பின்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக இருந்து வருகின்றார். பொதுவாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர்கள் நன்றாக சமைக்கும் பொறுப்பில் பாதி பொறுப்பு கோமாளிகளுக்கும் இருக்கிறது.

கோமாளிகள் சரியாக உதவி செய்யவில்லை என்றால் போட்டியாளர்களால் சரியாக சமைக்க முடியாது. மேலும் இப்படி ஒரு நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மோனிஷா, vj விஷாலுக்கு pair ஆனார். இப்படி ஒரு நிலையில் அவர் நேற்றய எபிசோடில் வெளியேற்றப்படடார். விஜே  விஷால் வெளியேறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும்  அதற்கு முக்கிய காரணம் பாக்கியலட்சுமி தொடர் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார் விஷால்.


இவ்வாறுஇருக்கையில்  விஷாலின் வெளியேற்றத்திற்கு மோனிஷா தான் காரணம் என்று சிலர் விமர்சித்து வந்தனர். இதற்கு விளக்கம் கொடுத்துள்ள மோனிஷா ‘எலிமினேஷனுக்கு என்னை பலரும் குற்றம் சொல்கிறீர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ளகிரேன். என்னதான் நான் Funஆ இருந்தாலும் யாருக்கு கோமாளியா போனாலும் நான் என்னால் முடிந்தவரை உதவி செய்வேன். இதெற்கெல்லாம் மேலாக இது வெறும் ஒரு நிகழ்ச்சி தான். அதை நீங்கள் எல்லாரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன், நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.


ஏற்கனவே இந்த வாரம் எலிமினேஷன் சர்ச்சை குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கும் ஷிவாங்கி ‘இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன். நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான்.அத்தோடு  உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி. நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு சிறப்பாக வரும். அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை. நான் புதிதாக கற்றுக்கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே வந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.’

Advertisement

Advertisement