• Sep 20 2024

"2023-ல் இன்னும்".. விலையுயர்ந்த Harley Davidson பைக்கில் நடிகை கனிகா..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கனிகா உலகப் புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்து இருப்பது போல புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான்   நடிகை கனிகா.மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம்  திரையுலகில் அறிமுகமானார்.

இதன் பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.



ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான்.அத்தோடு  மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

எனினும் தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார்.  நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.



சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். அத்தோடு நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.



இவ்வாறுஇருக்கையில் நடிகை கனிகா, தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த 2023 ஆம் ஆண்டு இன்னும் நன்றாக பைக் ரைடு செய்ய வேண்டும்" என்றும் ட்வீட் செய்துள்ளார். நடிகை கனிகா கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த ஹார்லி டேவிட்சன் ஐயர்ன் 883 பைக்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement